Sunday, May 21, 2006

என்ன எழுதப் போகிறேன்?

சின்ன வயதில் இருந்தே காதல் புனிதமானது என்று நம்பித் திரிந்த ஆள் நான். இப்பொழுதும் அந்த நம்பிக்கையிலிருந்து மாறுபாடுகள் அதிகம் இல்லை எனக்கு. அப்படி நம்பிக்கை வைத்து திரிந்தால் என்னை சுற்றி நடந்த காதல்களில் தனி ஈடுபாடு உண்டு எனக்கு.

எனக்கு புனிதமாகத் தெரிந்த சில காதல்கள் பிரிந்ததுண்டு. நான் என்னடா காதல் செய்கிறார்கள் என்று நினைத்த காதல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு.

காதல் திருமணத்தில் நின்று பெண் மாப்பிள்ளை கிண்டல் செய்த அனுபவமும் உண்டு. காதலரின் கடைசி சந்திப்பில் இருந்து அழுது கொண்டே வந்த தோழனை அழைத்துக் கொண்டு நடந்த சம்பவங்களும் உண்டு.

மொத்ததில் என் அனுபவங்கள் எனக்கு காதலைப் பற்றி பல விசயங்களைக் கற்றுத் தந்தது முக்கியமாக காதலில் தோல்வி என்பது என்றுமே இல்லை என்பதை உணர்த்தியது. காதலில் பிரிவு உண்டு ஆனால் பிரிவிலும் காதல் வெற்றிதான் கொள்கிறது.

இப்படி என்னை நெகிழ வைத்த, ஆச்சர்யப்படுத்திய, கோபம் கொள்ளச் செய்த, அழுக வைத்த, காதல்களைப் பற்றி பகிர நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு.

3 comments:

said...

வாங்க குமரன் இப்பத்தான் நம்மளுக்கும் புரிகிற மாதிரியான விஷயங்களை எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்.

said...

மற்றவர்கள் காதலை எழுதுவதும்,ஆராய்வதும்,படிப்பதும் சுவாரசியம் தான்

நமக்கு என்று வரும் போதுதான் மற்றவர்கள் ஆராயும்படி போன காதலின் வலி தெரியும்

said...

better, story solama real a nadanthatha solirukeenga,